???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜி.வி.பிரகாஷ் படத்தை வாங்கமறுத்த தொ.கா.!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   08 , 2014  01:03:32 IST

 
    இப்போதெல்லாம் திரைப்படங்களைத் தொடங்கும்போதே இந்தப்படத்துக்குத் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையாக இவ்வளவு தொகை கிடைக்கும் என்று கணக்குப் போட தொடங்குகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் படம் தொடங்கும்போதே அதன் உரிமையை வாங்கப் போட்டி போடும் தொலைக்காட்சிகளோ இப்போது படம் வெளியான பிறகே படங்களை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டது. இதனால் நிறையப்படங்கள் விற்காமல் தேங்கிக்கிடக்கின்றன. அண்மையில் நாய்கள் ஜாக்கிரதை மற்றும் திருடன்போலிஸ் ஆகிய இரண்டுபடங்களை மட்டுமே தொலைக்காட்சிகள் வாங்கியிருக்கின்றனவாம். புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இந்த நிலை. பெரியநடிகர்களின் படங்கள் உடனடியாக விற்றுவிடுகின்றன என்கிறார்கள். இப்போது ஸ்டுடியோகிரின்நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் டார்லிங் படம் தயாராகியிருக்கிறது. இந்தப்படம் தயாராகிவிட்டது. இந்த நிலையில் அந்தப்படத்தின் தொலைக்காட்சிஉரிமையை வாங்கிக்கொள்ளச் சொல்லிக்கேட்டு சன்தொலைக்காட்சியை அணுகினாராம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர்களோ புதுப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே படங்களை வாங்குவோம் என்று சொல்லிக் கைவிரித்துவிட்டார்களாம். பெரியதயாரிப்பு நிறுவனம் இசையமைப்பாளராகப் புகழ்பெற்றவர் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் உடனே தொலைக்காட்சிஉரிமையை வாங்கிக்கொள்வார்கள் என்று நினைத்த ஞானவேல்ராஜாவே அதிர்ச்சியடைந்துவிட்டாராம். இந்தவிசயத்தைக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் நம்முடைய மதிப்பு இவ்வளவுதானா என்றெண்ணி அப்செட்டாகிவிட்டாராம்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...