அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு.: மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   06 , 2021  10:46:53 IST

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத்தை நாசரத்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்தநிலையில் நேற்று சிறையில் உள்ள ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஹேம்நாத்தை, மத்திய குற்றப்பிரிவினர், மோசடி வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர். 2 நாள் விசாரணை முடிவில் தான் ஹேம்நாத் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து இன்று நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சிசிபிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சித்ரா தற்கொலை வழக்கை சிசிபிஐடி விசாரிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...