![]() |
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!Posted : திங்கட்கிழமை, ஜனவரி 10 , 2022 11:18:38 IST
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான சந்திப்பில் புதிய முதலீடுகள் செய்வது உள்ளிட்டவை குறித்து அவர் பேச்சு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சீனா பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் விவசாயப் பணிகளில் ரசாயன உரங்களுக்குப் பதிலாக முழுதும் இயற்கை உரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தி இயற்கை உரங்களை சீனா ஏற்றுமதி செய்தது. தரமில்லாததால் அது நிராகரிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொகையை வழங்கவும் இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இலங்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இலங்கை மத்திய வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்து சீனா நடவடிக்கை எடுத்தது. பல சுற்று பேச்சுகளுக்கு பின் சமீபத்தில் ஒப்பந்தத் தொகையில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
|
|