???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி 0 டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்பு விவகாரம்: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் 0 மாநிலங்களவை எம்.பி. பதவி: மாயாவதியின் ராஜினாமா ஏற்பு 0 ஜனாதிபதி தேர்தல்: 60,683 வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் முன்னிலை 0 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக 0 தமிழகத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 0 தி.மு.க.வின் முரசொலி பவள விழாவில் ரஜினி - கமல் பங்கேற்பு 0 ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 0 ரஜினி - கமல் இருவராலும் ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாது: திருமாவளவன் பேட்டி. 0 கார்த்தி சிதம்பரத்துக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் 0 நீட் தேர்வு விலக்குக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம் 0 கோவையில் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு: முதல்வர் 0 கமலுக்கு அரசியல் தெரியாது: எடப்பாடி பழனிசாமி 0 செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா 0 குண்டர் சட்டத்தில் மாணவி கைது: முதலமைச்சர் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியா – வியட்நாம் வர்த்தக ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  01:11:02 IST

தென் சீனக் கடலில் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் டான் டங், நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இந்திய கப்பல்கள் சுதந்திரமாக சென்று வரவும், அப்பகுதியில் இயற்கை எரிவாயு எண்ணெய் வளங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தம் இருதரப்பினரிடையே கையெழுத்தானது. ஏற்கனவே தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக வியட்நாம் மற்றும் சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், வியட்நாம் அரசு இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தி தொடர்பாளர், தென் சீன கடலில் சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டால் அதனை, சீனா நிச்சயமாக எதிர்க்கும் எனத் தெரிவித்தார். எனினும் சீனாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, வர்த்தக ரீதியான இரு நாட்டு ஒப்பந்தங்களில் தலையிட சீனாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...