???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   28 , 2020  01:02:07 IST

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டிட வேலை உள்ளிட்ட முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருந்த லட்சக்கணக்கான வேலையிழந்து தவித்துவருகின்றனர். உணவின்றி தவிக்கும் தொழிலாளர்கள் குறித்த தி வயர் ஆங்கில இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கோய்ரிபுர் கிராமத்தில் முஷாஹர் இனத்தைச் சேரந்த பத்து வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள் ஆடு மாடுகளின் உணவுக்காக போடப்படும் புல்களை உப்பு தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ராணி, பூஜா, விஷால், நீர்ஹூ, சோனி, கோலு என்று தெரியவந்தது. முஷாஹ்ரி பாஸ்டி பகுதியில் 10 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அதில், 10 வயதுகுட்பட்ட 12 குழந்தைகள் வசித்துவருகின்றனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுமான நிறுவனங்கள், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தினசரி கூலிகளாக வேலை பார்த்துவருகின்றனர். அந்தக் குழந்தைகள் புல் சாப்பிடுவதை நேரில் பார்த்த நிருபர் ராஜ் குமர் திவாரி கீழ்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளன்று இரவில், அந்த ஊரில் உயிரிழந்தவரின் வீட்டின் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவை அந்தக் குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். மறுநாள், உண்பதற்கு வீட்டில் ஏதும் இல்லாத நிலையில் அருகிலிருந்த வயல்களிலிருந்து உருளைக் கிழங்குகளை பறித்து எண்ணெய் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.

அதற்கு மறுநாள் அவர்கள் சாப்பிடுவதற்கு எந்த வழியும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த புற்களை உப்புத் தொட்டு சாப்பிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டது. அதனையடுத்து, படகான் காவல் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் சிங், அந்த மக்களைச் சந்தித்து உணவு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதனையடுத்து, மாவட்ட நீதிபதி கவுசல்ராஜ் சர்மாவும் இந்த விவகாரத்தில் தலையிட்டார். கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 15 கிலோ ரேஷன் பொருள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...