அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறுமி பாலியல் வன்கொடுமை: 9 நாட்களில் தீர்ப்பு!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  10:17:03 IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்ஹாவடா பகுதியை சேர்ந்த கமலேஷ் மீனா என்ற 25 வயது நிரம்பிய நபர் அதேபகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
 
இந்த சம்பவம் தொடர்பாக கோட்ஹாவடா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 26-ம் தேதி இரவு புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் குற்றவாளி கமலேஷ் மீனாவை மறுநாளே (செப்.27) கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கமலேஷ் ஒப்புக்கொண்டுவிட்டான். கமலேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இதனை தொடர்ந்து, கமலேஷ் மீனா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் கமலேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த விசாரணை 5 நாட்களில் முடிவடைந்தது.
 
இந்நிலையில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கமலேஷ் மீனாவுக்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி கமலேஷ் மீனாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி விகாஷ் குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும், குற்றவாளி கமலேஷுக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 
 
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு குற்றம் நடைபெற்ற 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வு பாலியல் குற்றங்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...