செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு!
நாட்டின் 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு!
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 26 , 2023 09:28:19 IST
நாட்டின் 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கம். அதன்படி, தெலங்கானாவில் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை பறக்கவிட்டார். முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் தமிழிசை ராஜ்பவனில் உள்ள தர்பார் அரங்கின் முன் தேசிய கொடியை பறக்கவிட்டார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பதிவில் " நம் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர் ராவுக்கும் மத்திய பாஜகவுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாகவே மத்திய அரசை அதன் செயல்பாடுகளை தெலங்கானா முதலமைச்சர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் தெலங்கானா வருகையின் போது கூட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார். அந்த மோதல் போக்கின் தொடர்ச்சியானது, ஆளுநர் தமிழிசைக்கும் தெலங்கானா அரசுக்கும் நீடித்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற ஆளுநரின் குடியரசு தின விழாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
|