???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   18 , 2019  21:27:42 IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர்.
   
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் இரு தரப்பினருக்கிடைய ஏற்பட்ட தகராறில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.  அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வந்தாலும், ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர். அதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்
 
இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் காலணி தெருவில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். மேலும், ஒரு சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...