???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

600 பெண்களை ஏமாற்றிய சென்னை வாலிபர்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  06:56:43 IST

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

5 மாத தீவிர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான சாப்ட்வேர் எஞ்சினர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர

 

தான் ஒரு பிரபல ஹோட்டலின் மனித வளத்துறை மேலாளர் என்று சொல்லிகொண்டு பெண்களை தொடர்புகொள்வார் அவர். வேலை தேடும் பெண்கள் அவரது பேச்சால் மயங்குவர், முதல் கட்ட நேர்காணல் முடிந்தது இரண்டாம் கட்ட நேர்கானல் நடக்கும் என்பார். பிறகு ஓட்டலில் வரவேற்பறையில் பணி புரியவேண்டுமென்றால் அழகாகவும் நல்ல உடல்கட்டுடன் இருக்கவேண்டும். எனவே அதை வெளிப்படுத்தும் வகையில் படங்கள்ளை அனுப்பச் சொல்வார். வேலை கிடைத்துவிடும் என்று நம்பிய பெண்களும் புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வாட்ஸ் அப் விடியோ காலில் உடலழகைக் காட்டும் ஒளிப்படங்களையும் பெற்றுள்ளார்.

 

பிறகு இவற்றை இணையத்தில் வெளியீடுவேன் என்றுகூறி அவர்களை மிரட்டி பணத்தை பெற்றுள்ளார்.

 

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதீப் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர் என்பதால் மன உளைச்சலின் வெளிப்பாடாக பெண்களிடத்தில் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.  இதனால் பொய்யான எச்ஆர் பக்கத்தை முகநூலில் உருவாக்கி பெண்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இறுதியாக அதையே வழியாகப் பயன்படுத்தி பெண்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார். எல்லா படங்களையும் செல்போனில் தனியாக பாஸ்வேர்ட் போட்டு வைத்துள்ளார்.

 

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த காவல்துறையினர் பிரதீப்பை கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் இருந்து பல பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளது தெரிய வந்துள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...