![]() |
சென்னை: தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது!Posted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10 , 2019 05:29:25 IST
ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்காளதேஷ் அமைப்பை சேர்ந்த அசாதுல்லா ஷேக் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமேண்டர் எஸ்.கே. சைனி நேற்று தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்காளதேஷ் அமைப்பை சேர்ந்த அசாதுல்லா ஷேக் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறது.
|
|