அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  08:18:44 IST

நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
 
தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்துவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு நடைபெற உள்ள முதல் குடியரசு தின விழா இதுவாகும். 26-ந் தேதி காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை அணிவிக்கிறார்.
 
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இதேபோன்று அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு அனுமதி கிடைக்காததால் அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
 
அதன்படி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது. அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெறுகிறது.
 
அதே அலங்கார ஊர்தியில் மங்கள இசைக்கு ஏற்ப பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இதுதவிர வள்ளுவர்கோட்டம் தேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன.
 
2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன.
 
3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெறுகிறது.
 
4-வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம பெறுகின்றன.
 
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன. போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...