???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஓ மை கடவுளே… அவங்கன்னு நினைச்சு எனக்கு போன் பண்றாங்களே…: ரியல் எஸ்டேட் அதிபர் குமுறல்

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  03:36:09 IST


Andhimazhai Image

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு வித்தியாசமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ’ஓ மை கடவுளே’ படத்தில் இடம் பெற்ற காட்சியால்  ரியல் எஸ்டேட்  அதிபர் ஒருவரும்  ஓ மை கடவுளே என்று தலையை பிய்த்துக்கொண்டுள்ளார்.

 

அஷோக் செல்வன், வாணி போஜன், ரித்விக்கா சிங், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்  ’ஓ மை கடவுளே’. சின்னத்திரையின்  நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன் இத்திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி  உள்ளார். இதற்கு முன்பாக தெலுங்கு படம் ஒன்றில் அவர் நடித்திருக்கிறார்.  சின்னத்திரையில் முத்திரை பதித்த இந்த நடிகை தற்போது இந்த படம் மூலம் மேலும் பிரபலம் அடைந்துள்ளார். ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் நடித்தது மூலம் தற்போது ரசிகர்களால் ’மாலா அக்கா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.  ஆனால் இத்திரைப்படத்தில் இவர்  நடித்த ஒரு காட்சியால்  சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மாலா அக்காவாக வரும் வாணி போஜன் கதாநாயகனிடம் தனது தொலைபேசி எண்ணை கூறுவார்.  இதைப்பார்த்த ரசிகர்கள், வாணி போஜனின் நிஜ தொலைப்பேசி எண் இதுதான் என்று நினைத்து தொடர்ந்து அந்த எண்ணுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

 

ஆனால் எதிர்முனையில் அழைப்பை எடுத்தது ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன்.  வாணியின்  எண் இது இல்லை என்பதை அறிந்த ரசிகர்கள் கடுப்பாகி பூபாலனை திட்டி தீர்த்துள்ளனர். இப்படி இரண்டு மூன்று அழைப்புகள் வந்தால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து பல அழைப்புகள் வரவே  என்ன செய்வது என்று தெரியாமல் பூபாலன் தவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

 

‘ வாணி போஜன் செல்போன் எண் என்று நினைத்து பலரும் தனக்கு அழைப்பு விடுக்கின்றனர்.  இதனால் படத்திலிருந்து தனது செல்போன் எண்ணை உடனடியாக நீக்க இயக்குநர் மாரிமுத்துவுக்கு  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ‘ என்று புகார் மனுவில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

படத்தில் வரும் போன் எண்ணை ஒரிஜினல் எண்ணாக நினைக்கும் ரசிகர்கள் இன்னுமா இருக்கிறார்கள்? ஓ மை கடவுளே…

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...