???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விடிய விடிய மழை!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   03 , 2018  22:03:58 IST

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரத்திலும் அதிகாலையிலும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்றிரவு விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
 
சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புவியரசன் கூறினார்.
 
நாகையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆரணி, லட்சுமிபுரம் பகுதிகளில் அணைக்கட்டு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...