???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   20 , 2019  21:56:46 IST

நாடு முழுவதும் உள்ள 21 நகரங்களில் மத்திய நுகர்வோர் நலத்துறை கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. இதில் 20 நகரங்களின் தண்ணீர் முழுமையாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

44 வகையான பரிசோதனைகள் நடத்தியதில் குடிப்பதற்கு இயலாத வேதிப் பொருட்கள் இருந்தால் அவை நேரடியாக குடிக்க இயலாத தண்ணீர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இதில், முதலிடத்தில் டெல்லி நகரமும், முழுமையாக குடிக்க ஏற்றதாக மும்பை குடிநீரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக சென்னையில் முகப்பேர், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லூர், தியாகராய நகர், எழும்பூர் ஆகிய 10 இடங்களில் மெட்ரோ குடிநீர் வாரியம் விநியோகிக்கும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை முழுவதும் குடிக்க ஏற்றது அல்ல என்று விரிவான அறிக்கையில் தெரிவித்து உள்ளது ஆணையம்.

புளோரைடு, கலிபார்ம், அம்மோனியா, இ கொலி மற்றும் TDS என்று சொல்லப்படும் கரையும் திட பொருட்கள் ஆகியவை இருப்பதாகவும், அதனால் அவை குடிக்க ஏற்றது அல்ல என்றும் தெரிவித்து உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...