???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை 0 இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   24 , 2020  00:39:24 IST

மும்பைக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கிறது.

சார்ஜாவில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணியில் ஜாதவ் மற்றும் வாட்சன் நீக்கப்பட்டு ருதுராஜ், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் களமிறக்கப்பட்டனர்.

ஆரம்பம் முதலே சென்னையின் அணியின் பேட்டிங் சரிவை நோக்கி சென்றது. தொடக்க வீரர் ருதுராஜ் (0), ஜெகதீசன் (0), தீபக் சஹார் (0) என நேற்று சென்னை அணியில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க  சென்னை அணி 43 ரன்களுக்கு  7 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து நிலைத்து விளையாடிய சாம் கர்ரண் அரைசதத்தை பூர்த்தி செய்து சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

20-வது ஓவரில்  8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி பந்தில் சாம் கர்ரன் அவுட்டானார். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த சாம் கர்ரன் 9-வது விக்கெட்டுக்கு இம்ரான் தாஹீருடன் ஜோடி சேர்ந்து 43 ரன்களை எடுத்தார். இதுவே ஐ.பி.எல் வரலாற்றில் 9-வது விக்கெட்டுக்கான அதிக பார்ட்னர்ஷிப் ரன்களாகும்.

மும்பை தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரன்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி ஒரு மைடனுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து சென்னை அணி நிர்ணயித்த இலக்கை 12.2 ஓவர்களில் அடித்து மும்பை அபார வெற்றி பெற்றது. குவிண்டன் டி காக் 46 ரன்கள் (37 பந்துகள், 5 பவுண்டரி, ச் சிக்ஸர்), இஷான் கிஷன் 68 ரன்கள் (37 பந்துகள், 6 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதுவரை நடந்த சீசன்கள் அனைத்திலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக சென்னை அணி இருந்தது. ஆனால், இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறிய சிஎஸ்கே, கடைசி 4 போட்டிகளில் கட்டாயம் ஜெயிக்க வேண்டிய நிலையில் மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ப்ளே ஆஃப் வாய்ப்பை  இழந்துவிட்டது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...