???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  22:43:45 IST

மெட்ராஸ் ஐஐடியில் 2011ம் ஆண்டு தொடங்கி இதுவரை 12 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இறந்த மாணவர்களின் பட்டியல் இதோ...

மே 4, 2011 நித்தின் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இறுதியாண்டு எம்.டெக் மாணவர் இறுதி ஆண்டு பாடத்தை மீண்டும் தேர்ச்சி பெற வற்புறுத்தியதால் மனமுடைந்து விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் 8, 2012 - குல்தீப் யாதவ், உத்தரபிரதேசத்தை இராண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் காதல் தோல்வி காரணமாக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே அண்டு ஆகஸ்ட் 22 - மானசா மெருகு, ஆந்திராவை சேர்ந்த முதலமாண்டு எம்.டெக் மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.

நவம்பர் 4, 2013 - ஆகாஷ் குமார் மீனா, ராஜஸ்தானை சேர்ந்த முதலாமாண்டு பி.இ மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர் 22, 2015 - நாகேந்திர குமார் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மெ.டெக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஒருமாத இடைவெளிக்குள்ளாக அக்டோபர் 19 - ராகுல் ஜி பிரசாத்  கேரள மாநிலத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பி.டெக் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூலை 14, 2016, மகேஸ்வரி என்ற ஆந்திராவை சேர்ந்த ஆய்வு மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிசம்பர் 5, 2018 - அதிதீ சிம்ஹா, பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட ஐஐடி பேராசிரியர் குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஜனவரி 1, 2019 - ரஞ்சனா குமாரி, ஜார்கண்டை சேர்ந்த ஆய்வு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஜனவரி 28, 2019 - கோபால் பாபு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு எம்.டெக் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்

செப்டம்பர் 22, 2019 - ஷாஹல் கோர்மத், கேரளவை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர் வளாக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நவம்பர் 9, 2019 - பாத்திமா லத்தீப், கேரளாவை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி மத ரீதியான ஒடுக்குமுறையால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...