???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெள்ளம் மக்களுக்கும்,அரசுக்கும் பாடம் கற்பித்துள்ளது: தலைமை நீதிபதி

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   20 , 2015  23:43:57 IST


Andhimazhai Image

சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்களுக்கும், அரசுக்கும் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னையில் மழைநீர் வடிகாலுடன், கழிவுநீர் இணைக்கப்படுவதால், அடைப்புகள் ஏற்படுவதாகவும், வணிக வளாகம், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்துபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தும், நீர் வழிகளை ஆக்கிரமித்தும் கட்டிடங்கள் கட்டுவதால் ஏற்படும் பாதிப்பை பொதுமக்களுக்கும், அரசுக்கும் சென்னை வெள்ளம் கற்றுக் கொடுத்துள்ளதாக கருத்து தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...