செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
30 முதல் 39 வயது ஆண்களுக்கே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு: சென்னை மாநகராட்சி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது.…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
30 முதல் 39 வயது ஆண்களுக்கே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு: சென்னை மாநகராட்சி
Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 09:45:49 IST
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். இதுவரை சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரணமாக குணமடைந்து உள்ளனர். 10 ஆயிரத்து 685 பேர் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
சென்னைக்கு இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளை பரிசோதித்ததில், 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவந்துள்ளது.சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறைந்தபட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் அடங்குவர் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
|