???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்வுமன் தூக்கிட்டு தற்கொலை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  23:43:08 IST

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்கா லிங்கம் இதே நிறுவனத்தில் இணை சேர்வுமனாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நலிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்கா லிங்கம் தொழில் நலிவு குறித்து சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அந்த சந்திப்பில் மேலாளர்களை கடுமையாக இவர் திட்டியதாகவும் அந்த காரணத்தினால் கணவன்-மனைவிக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொழில் பிரச்சினையானது வீட்டுப் பிரச்சனையாக மாற ஆரம்பித்து உள்ளது. இந்த காரணத்தால் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வியாழன் காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக ரீட்டாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...