???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவியத்தலைவன் எப்படி ? அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் -16

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   05 , 2014  03:30:22 IST


Andhimazhai Image

கேள்வி: காதலுக்கு காமம் அவசியமா?காமம் இல்லாத காதல் சாத்தியமா?
விக்கி.பதில்: ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை.


 
 கேள்வி: எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற உங்கள் முதல் நாவல் எங்கே கிடைக்கும்?பதில்: எங்கேயும் கிடைக்காது.  அதை நான் விரிவாக்கி எழுதலாம் என்று இருக்கிறேன்.


 
கேள்வி: இந்தத் தலைமுறையினருக்கு பெரும்பாலும் இயற்கையை, குறிப்பாக மரங்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிவதில்லை. உண்மையில் இதுவும் சுயகேடுதானே?இதை எப்படி மாற்றுவது?
வெ.பூபதி, கோவை.


பதில்:  பள்ளிகளில் வெட்டுக் குத்து, கொலை, குடித்து விட்டு வந்து வாந்தி எடுப்பது, அடியாள் வைத்து ஆசிரியரை அடிப்பது என்று இருக்கும் இப்போதைய நிலையில் மரமாவது செடியாவது?  கல்வி முறையில் அடிப்படையான மாற்றங்களைச் செய்யாமல் இளைய தலைமுறையிடமிருந்து எந்த நல்ல விஷயத்தையும் எதிர்பார்க்க முடியாது.  

 
 
கேள்வி: மரணம் பேரின்பம் என்கிறது ஆன்மீகம்.  காமம், சிறுநேர மரணம் எனப்படுகிறது.  அப்படியானால் அதை ஏன் சிற்றின்பம் என்கிறோம்?  ஏன் இந்த முரண்பாடு?
வ.பொன்னழகன் ,கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை.


பதில்: மரணம் பெருந்தூக்கம்.  பேரின்பம்.  காமம் சிறு தூக்கம்.  சிற்றின்பம்.  முரண்பாடு இல்லை.  மேலும், சொர்க்கத்துக்குப் போனால்தான் பேரின்பம்.  நரகம் கிடைத்தால்?  ஆனால் எந்த தர்க்கம் எப்படிச் சொன்னாலும் காமம் சிற்றின்பம் என்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டேன்.  காமம் பேரின்பம், பேரின்பம், பேரின்பம்.  
 
 
கேள்வி: என் கேள்விக்குப் பதிலாக செக்ஸ் கதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள்.  நான் நல்ல காதல் கதைகளையே கேட்டேன்.  சொல்ல முடியுமா?
அருண்.


பதில்: நல்ல காதல் கதைகளுக்கு உதாரணமாக தி. ஜானகிராமனின் நாவல்களைச் சொல்லலாம்.  ஆங்கிலம் புரிந்தால் ஷேக்ஸ்பியர்.  ஆனால் இந்த இருவரையும் படித்தால் நட்டுக் கொண்டு நிற்காது அன்பரே!  


 
கேள்வி: மஹா அவ்தார் பாபாவை நேரில் பார்த்திருக்கிறீர்களா?  எப்படி? எங்கே? அவரிடமிருந்து தீட்சை பெற்றிருக்கிறீர்களா?
கார்த்திக், சிங்கப்பூர். 

 
 
பதில்: சிங்கப்பூரில் இவ்வளவு அப்புராணியாக எல்லாம் இருப்பார்களா என்ன?  மஹா அவ்தார் பாபாவைப் பார்ப்பதும் தீட்சை பெறுவதும் என்ன அவ்வளவு சுலபமா?  எனக்குத் தெரிந்து அவரிடம் தீட்சை பெற்றவர் பரமஹம்ஸ யோகானந்தா மட்டுமே.  அவர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதை என்ற அற்புதமான நூலைப் படித்துப் பாருங்கள்.  உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் புரியும்.    

 கேள்வி: உங்களுக்குப் பிடித்தமான முக அலங்காரம் எது? நாடிக்குக் கீழ் கழுத்து வரை நீளும் தற்போதய உங்கள்தோற்றம் பிரெஞ்சு தாடியின் சரியான வடிவமா?
- ராஜேஸ் ஆரோக்கியசாமி, வாஷிங்டன், அமெரிக்கா.பதில்: சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ஒரு கட்டுப்பெட்டியிடம் வாஷிங்டனிலிருந்து இப்படி ஒரு கேள்வியா?  எனக்குப் பலருடைய முக அலங்காரம் பிடிக்கும்.  மீசையில் சால்வதோர் தாலியையும் நீட்ஷேவையும் யாரும் அடித்துக் கொள்ள முடியாது.  என் தாடி ஃப்ரெஞ்ச் தாடியா என்று எனக்குத் தெரியாது.  பார்ப்பவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.  என்னிடம் ட்ரிம்மர் கூட கிடையாது.  ஒரு உருப்படாத, எதற்கும் பயன்படாத ஹைதர் காலத்துக் கத்தரிக்கோலை வைத்துக் கொண்டு இந்தத் தாடியை சீரமைக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.  

 

http://photobucket.com/images/friedrich%20nietzsche?page=1

 

http://greatmustachesinhistory.com/wp-content/uploads/2013/11/dali.jpgகேள்வி: காவியத் தலைவன் பார்த்தீர்களா?
கணேஷ், சென்னை.பதில்:   அவருடைய அங்காடித் தெருவை கிழி கிழி என்று கிழித்து எழுதியவன் நான்.  இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்  நான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது என்னை வந்து பார்த்தவர் வசந்த பாலன்.   அந்த அளவு பெருந்தன்மை எனக்குக் கூட கிடையாது.  என் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார்.  ஆனால் நல்ல மனிதர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.  என் சினிமா அனுபவத்தில் படம் ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் கிளம்பி ஓடி வந்த படங்கள் என்று இரண்டு மூன்றை மட்டுமே சொல்லலாம்.  சரத்குமார் நடித்த நாடோடி மன்னன், அதர்வா நடித்த பானா காத்தாடி, அவன் இவன்.   இந்த மூன்றுமே தேவலை என்று நினைக்க வைத்த படம் காவியத் தலைவன்.  ஏனென்றால், ஐந்து நிமிடம் ஆனதுமே ஓடி விடலாம் என்று தோன்றி விட்டது.  நான் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்ததால் இருட்டில் நடக்கும் போது தடுக்கி விழுந்து விடக் கூடாதே என்று தான் இன்னொரு ஐந்து நிமிடம் யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் மரண மொக்கை தாங்க முடியாமல் போய்க் கொண்டிருந்ததால் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பத்தாவது நிமிடம் ஓடி வந்து விட்டேன்.  அங்காடித் தெருவையாவது படம் முழுவதும் பார்த்து விட்டு விமர்சித்து எழுதினேன்.  ஆனால் காவியத் தலைவனை ஐந்து நிமிடம் கூட சகிக்க முடியவில்லை.  முதலில் எரிச்சல் ஊட்டியது நாசருக்குப் போட்டிருந்த ஒப்பனை.  முதியவர் என்றால் இப்படியா இருப்பார்?  பள்ளிக்கூடத்தில் பையன்கள் தாத்தா வேஷம் போடுவார்கள் இல்லையா, அவர்கள் கூட இன்னும் கொஞ்சம் நன்றாக மேக்கப் போட்டிருப்பார்கள்.  அவர் தலையில் வைத்திருக்கும் விக் அவிழ்ந்து விடாமல் ஒட்டப்பட்டிருக்கும் கோந்து அப்படியே தெரிகிறது.  கொடுமை, கொடுமையிலும் கொடுமை.  ஏன் ஐயா, ஒரு நல்ல மேக்கப்மேன் கூடவா கிடைக்காமல் போய் விட்டார்?  அடுத்து, இந்தத் தம்பி ராமையா.  படங்களில் அவர் போடும் காட்டுக் கூச்சல் தாங்க முடியவில்லை.  பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஒரு நல்ல முயற்சி.  அதில் கூட இந்தத் தம்பி ராமையாவின் அலட்டலும் காட்டுக் கூச்சலும் தாங்க முடியாமல் இருந்தது.  இவ்வளவுக்கு அவர் நடித்த முதல் படமான மைனாவில் அவர் நடிப்பைப் பார்த்து வியந்தவன் நான்.  கொஞ்ச காலத்துக்கு இயக்குனர்கள் அவருக்கு ஊமை வேஷம் கொடுத்தால் நான் அவர்களுக்கு ரொம்பவும் நன்றியுடையவனாக இருப்பேன்.  தம்பி ராமையாவும் இன்னொரு நடிகரும் சேர்ந்து ஒரு காமெடி பண்ணுகிறார்கள்.  கவுண்ட மணியும் செந்திலுமாம்! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட மாதிரி இருந்தது.  காமெடியா அது… அழுகைதான் வந்தது.  அந்த ‘செந்தில்’ வாத்தியாரின் (ராமையா) வேட்டியைக் கிழித்து கோவணமாய் ஆக்கிக் கொடியில் காயப் போட்டு விடுகிறாராம்.  இதைப் போய் ராமையா தன் குரு நாஸரிடம் போய் புகார் செய்ய, நாசர் வந்து விசாரிக்கிறார்.  யாருக்கு அருணகிரிநாதர் பாடல் தெரியும்?  எல்லா பையன்களும் உளற என்னய்யா வாத்தி நீரு என்று கேள்வி நாசரிடமிருந்து.  கடவுளே, இப்படியெல்லாமா ஒரு ரூம் போட்டு யோசித்தீர்கள்?  உண்மையிலேயே வசந்த பாலன், உங்கள் அஸிஸ்டெண்டுகளெல்லாம் உங்களுக்குப் பயந்து கொண்டு தான் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  நிச்சயமாக இம்மாதிரி காட்சிகளெல்லாம் மரண மொக்கை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.  


நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம், நாடக சபா எல்லாம் ரொம்பவும் fake- ஆக இருக்கின்றன.  எதிலுமே நிஜத்தன்மை இல்லை.  எல்லாமே செயற்கையாக இருக்கிறது.  படத்தில் sensibility என்பது மருந்துக்குக் கூட இல்லை.  மணி ரத்னம், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து கூடவா நீங்கள் எதுவுமே கற்கவில்லை?  ஒரு சினிமா ரசிகனை பத்து நிமிடம் கூடவா உங்களால் உட்கார வைக்க முடியாது?  விஜய் நடித்த துப்பாக்கி என்ற படம் பார்த்தேன்.  அதில் எந்த விதப் பாசாங்கும் இல்லை.  பக்கா பொழுதுபோக்கு.  அவர்களிடம் உள்ள தெளிவு கூட உங்களிடம் இல்லையே?  என்ன செய்ய நினைக்கிறீர்கள்?  நல்ல படமா?  துப்பாக்கி மாதிரியான பொழுதுபோக்குப் படமா?  எப்படி இருந்தாலும் காவியத் தலைவன் இரண்டிலுமே சேராது.  பத்து நிமிடம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத இப்படிப்பட்ட படங்களை விட பேரரசு மாதிரி படம் பண்ணலாம்.  குறைந்த பட்சம் அதில் எந்தப் பாசாங்கும் இல்லை.  


கேள்வி: உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி ஃப்ரான்ஸ் பற்றிப் பேசுகிறீர்களே, அந்த நாட்டில் அப்படி என்ன விசேஷம்? செல்வகுமார், மதுரை.பதில்: காரணம் இல்லாமல் இல்லை.  ஃப்ரான்ஸில் Colette என்று ஒரு பெண் எழுத்தாளர் இருந்தார்.  அவர் பிறந்த ஆண்டு 1873.  இறந்தது 1954-இல்.  ஏன் பிறந்த, இறந்த ஆண்டுகளைச் சொல்கிறேன் என்றால் மீதி கதையைக் கேளுங்கள், உங்களுக்கே புரியும்.  காலத் (அதுதான் சரியான உச்சரிப்பு) ஒரு ராணுவ அதிகாரியின் மகள்.  காலத் தன் இருபதாவது வயதில் தன்னை விட 15 வயது அதிகமான ஒரு எழுத்தாளரைத் திருமணம் செய்து கொண்டார்.  சில ஆண்டுகளில் தன் கணவரைப் பிரிந்து நத்தாலி பார்னி என்ற பெண் எழுத்தாளருடன் வாழ ஆரம்பித்தார்.  காலத் ஒரு bi-sexual.  அதாவது, ஆண்களோடும் பெண்களோடும் பாலுறவு வைத்துக் கொள்ளக் கூடியவர்.  காலத் இறக்கும் வரை நத்தாலியோடு அவருக்கு உறவு இருந்தது.  அதே சமயம், மிஸ்ஸி என்ற மார்க்கி பெண்ணோடும் லெஸ்பியன் உறவில் இருந்தார்.  ஃப்ரான்ஸில் பிரபு வம்சத்தவர்களை மார்க்கி என்பர்.  பாரிஸில் உள்ள Maulin Rouge என்ற உலகப் புகழ் பெற்ற கேபரே அரங்கில் மிஸ்ஸியோடு ஒரு நாடகத்தில் நடிக்கும் போது காலத்தும் மிஸ்ஸியும் மேடையிலேயே முத்தமிட்டுக் கொண்ட சம்பவத்தைப் பார்த்து அரங்கத்தில் பெரிய கலவரமே உண்டானது. அந்தக் கலவரத்தை அடக்க போலீஸ் வந்தது.  ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள்.  மீண்டும் காலத் பிறந்த, இறந்த ஆண்டுகளை கவனியுங்கள்.  இதெல்லாம் இன்று நேற்று நடந்ததல்ல.  அந்த முத்த சம்பவம் நடந்த ஆண்டு 1907.  இதற்குப் பிறகு காலத்தும் மிஸ்ஸியும் நடித்த அந்த நாடகம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.  இந்த சூழ்நிலையின் காரணமாக, இருவரும் வெளிப்படையாக லெஸ்பியன்களாக வாழ முடியவில்லை என்றாலும் வெளியே தெரியாமல் ஐந்து ஆண்டுக் காலம் அந்த உறவில் இருந்து பிறகு பிரிந்தார்கள்.  மிஸ்ஸியோடு காலத் லெஸ்பியன் உறவில் இருந்த சமயத்திலேயே காப்ரியல் என்ற இத்தாலிய எழுத்தாளரோடும் செக்ஸ் உறவில் இருந்தார்.  இதே கால கட்டத்தில் ஒரு கார் தயாரிக்கும் நிறுவன முதலாளியும் அவரது காதலராக இருந்தார்.

 

1912-ஆம் ஆண்டு Le Matin என்ற தினசரியின் ஆசிரியரை மணம் புரிந்து கொண்டார் காலத்.  இருவருக்கும் ஒரு மகள் பிறந்தாள்.  மகளோடு காலத்துக்கு சரியான உறவு இல்லை.  மகளை வளர்க்கச் சொல்லி இன்னொருவரிடம் கொடுத்து விட்டார்.  1914-இல் முதலாம் உலகப் போர் வந்த போது தன் கணவரின் மிகப் பெரிய எஸ்டேட்டை மருத்துவமனையாக மாற்றி போரில் காயமடைந்தவர்கள் மருத்துவ உதவி பெற உதவினார். பிறகு 1935-இல் இவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.  கணக்குப் போட்டுப் பாருங்கள், அப்போது அவர் வயது 62.  


1920-ஆம் ஆண்டு அவர் செர்ரி என்ற ஒரு நாவலை எழுதினார்.  காலத்தின் மாஸ்டர்பீஸாகக் கருதப்படும் அந்த நாவல் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு சீமாட்டிக்கும் ஒரு இளைஞனுக்குமான காதல் கதையைச் சொல்கிறது.  செர்ரிக்குப் பிறகு காலத் Jean Cocteau-உடன் காதல் வயப்பட்டார்.  கொக்தூ ஒரு உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், நாடகாசிரியர், இயக்குனர்.  இன்னொரு முக்கியமான விஷயம், காலத்துக்கும் அவருடைய கணவர்களில் ஒருவரின் மகனுக்கும் கூட செக்ஸ் உறவு இருந்தது.  இதற்கிடையில் அவருடைய நாவல்களை ஃப்ரான்ஸில் மிகவும் விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.  ஃப்ரெஞ்ச் இலக்கியத்துக்கு அவை மாபெரும் பங்களிப்பாக இருந்தன.  1954-இல் அவர் மரணம் அடையும் போது அவர் எழுதியிருந்த நாவல்கள் 50.  அவர் உயிரோடு இருந்த போதே அவருடைய வாழ்க்கை பற்றி ஒரு ஆவணப்படமும் எடுக்கப்பட்டது.  ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலேயே காலத் தான் மிகச் சிறந்த பெண் எழுத்தாளராக இன்றளவும் கருதப்படுகிறார்.  இதனால் எல்லாம் நான் ஃப்ரான்ஸைப் புகழவில்லை.  காலத் இறந்த போது ஃப்ரெஞ்ச் அரசாங்கம் அரசு மரியாதை கொடுத்து ராணுவ அணிவகுப்புடன் அடக்கம் செய்தது.  ஒரு பெண் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது ஃப்ரான்ஸில் அதுவே முதல் முறை.  நம் நாட்டில் பெரும் அரசியல் தலைவர்களுக்கே அந்த அரசு மரியாதை கிடைக்கும்.  காலத் என்ற இடத்தில் சாரு நிவேதிதா என்று போட்டு, ஃப்ரான்ஸ் என்ற இடத்தில் தமிழ்நாடு என்று போட்டுப் பாருங்கள்.  என்ன நடக்கும்?  அதனால்தான் நான் ஃப்ரான்ஸைக் கொண்டாடுகிறேன்…  


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...