???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழர்களின் தற்போதைய நிலை என்ன? சேனல்4 ஆவணப்படம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   27 , 2016  22:17:34 IST

இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் தற்போதைய நிலை குறித்து லண்டனை சேர்ந்த சேனல்4  தொலைக்காட்சி "இன்னும் இறைந்து  கிடக்கும் செருப்புகள்" என்ற பெயரில் புதிய ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.

சேனல்4 ன் மூத்த செய்தியாளர் ஜான் ஸ்னோ, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்து, இந்த ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று "இன்னும் இறைந்து கிடக்கும் செருப்புகள்" என்ற அந்த ஆவணப்படம் கூறுகிறது.

குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்யாவசிய தேவைகள் கூட இன்னும் பூர்த்தியாகாமல் இருப்பதாக அங்குள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டதாகவோ, காணாமல் போனதாகவோ கூறப்படும் தங்களது உறவுகள், எப்போது திரும்பி வருவார்கள் என்று கண்ணீரோடு காத்திருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். பொங்கலன்று விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இவர்களுக்கு இலங்கை அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பன்னாட்டு விசாரணைக்கு சர்வதேச நாடுகளும், வடக்கு மாகாண மக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும், இலங்கை அரசு இதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறார் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...