???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'சாம்பியன்' திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   14 , 2019  03:42:02 IST


Andhimazhai Image

கால்பந்தாட்ட விளையாட்டில் தடம் பதிக்க துடிக்கும் திறமையான இளைஞன், அவனது தந்தையை கொன்ற ரவுடியை பழி தீர்க்க அலைபவனாக மாறும் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறது சுசீந்திரனின் 'சாம்பியன்'.

 

வடசென்னை இளைஞர்களிடம் பாரம்பரியமாக இருக்கும் ஃபுட் பால் விளையாட்டு திறனை முன்வைக்கும் படமாக 'சாம்பியன்' தொடங்குகிறது. விளையாட்டில் துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை குற்றச்செயல்களுக்கு மடைமாற்றம் செய்பவன் தனசேகர் (ஸ்டன்ட் சிவா). அவனிடம் சிக்கி வாழ்க்கையை தொலைக்கிறார் கோபி (மனோஜ்). அவரைப்போல மகன் ஜோன்ஸ் (விஷ்வா) சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அசாத்திய திறன்கொண்டவராக இருக்கிறார்.

 

கணவர் மனோஜ் கால்பந்தாட்ட மைதானத்திலேயே இறந்ததால் ஜோன்ஸை ஃபுட் பால் விளையாட விடாமல் தடுக்கிறார் அவரது அம்மா ஜெயா. ஆனால், கால்பந்தாட்டத்தின் மீதிருக்கும் காதலால் அடம் பிடித்து ஜோன்ஸ் பயிற்சி மையத்தில் சேர்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக, அப்பாவின் கால்பந்தாட்ட நண்பர் நரேன் தான் பயிற்சியாளர். தனது திறமையால் கால்பந்தாட்டத்தில் வளர்ந்துவரும் ஜோன்ஸுக்கு ஒருகட்டத்தில் தனது அப்பா விளையாடும்போது சாதாரணமாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தெரியவருகிறது. விளையாட்டில் இருந்த கவனம் முழுவதும் ஜோன்ஸுக்கு அப்பாவை கொன்றவனை பழிதீர்ப்பதில் திரும்புகிறது. இதன்பிறகு என்னவானது என்பதை விவரித்து நிறைவுபெறுகிறது 'சாம்பியன்'.

 

கால்பந்தாட்ட வீரராக வரும் விஷ்வா (ஜோன்ஸ்) உண்மையில் வெகுசிறப்பாக விளையாடி கதை மீது நம்பகத்தன்மை வர வைக்கிறார். கால்பந்தாட்ட நுட்பங்கள், அதன் நெறிமுறைகளை முழுமையாக அறிந்தவராக திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும், தந்தையை கொன்றவன் மீதான சீற்றத்தை காட்டும் காட்சிகளிலும் அவரது உடல்மொழி கட்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது.

 

அவருக்கு அடுத்தபடியாக பயிற்சியாளர் சாந்தாவாக நடித்திருக்கும் நரேன் இப்படத்திற்கு மிக பொருத்தமான பாத்திர தேர்வு. பயிற்சியாளருக்குரிய உடல் தோற்றமும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் அவரது தேர்ந்த நடிப்பும் படத்தில் நன்றாக எடுபட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியிலும் அவருக்குரிய இடத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஸ்டண்டில் மட்டும் லேசாக தடுமாறியது தெரிகிறது. ராஜிவ் காந்தி கதாபாத்திரம் படத்தின் கமர்ஷியல் அம்சங்களுக்கு இன்னுமொரு பலம்.

 

வடசென்னையிலிருந்து வரும் கால்பந்தாட்ட வீரர்கள் சந்திக்கும் சிக்கலையும், அவர்கள் மீதிருக்கும் பொதுவான பார்வை குறித்தும் சொல்ல முயற்சித்திருக்கிறார் சுசீந்திரன். ஒருசில காட்சிகளை தவிர்த்து வசனங்களால் மட்டுமே அவரால் சொல்லமுடிந்திருக்கிறது. கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்திய கதையையும், அதனோடு கொலை, துரோகம் போன்ற முடிச்சுகளையும் திரைக்கதையாக்கி அவர் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். வழக்கமாக சுசீந்திரனுக்கு இரண்டு டிராக்குகள் உள்ளன. 'அழகர்சாமியின் குதிரை', 'மாவீரன் கிட்டு' போன்ற படங்கள் ஒன்று. மறுபுறம் 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற படங்களையும் தருவார். சாம்பியன் இந்த இரண்டு பாணியையும் ஒன்றாக முயற்சித்த படமாக முழுமை பெற்றிருக்கிறது. இசையில் அரோல் கொரேலி எதிர்பார்த்த அளவை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் 'மனதின் சாலையில்' பாடலின் மூலம் ஈர்த்திருக்கிறார். நல்ல கதையம்சமும், விறுவிறுப்பான அனுபவமும் தேடி திரையரங்கம் செல்பவரை 'சாம்பியன்' இந்த வாரம் ஏமாற்றாது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...