???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்' - ராமதாஸ்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   03 , 2019  02:14:31 IST


Andhimazhai Image
ஓஎன்ஜிசி சார்பில் 44 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
 இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
 
"காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களைச் சீரழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓஎன்ஜிசி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
 
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய 44 ஹைட்ரோகார்பன் கிணறுகள் இரு உரிமங்களின் அடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்கெனவே 200-க்கும் கூடுதலான எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
 
அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 104 கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி கடந்த ஜூன் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் ஓஎன்ஜிசி அமைச்சகம் விண்ணப்பித்துள்ளது. அவற்றுடன் சேர்த்து மேலும் 44 எண்ணெய்க் கிணறுகளையும் அமைத்தால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத்தகுதியற்ற மாவட்டங்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு உரிமம் வழங்கியது. அதை எதிர்த்து அப்பகுதி மக்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாகப் போராடியதன் விளைவாக அத்திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட மாநில அரசு, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இவ்வளவுக்குப் பிறகும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் அனுமதி அளிப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
 
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும், அதைச் சமாளிக்கும் வகையில் உள்ளூரில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதாலும்தான் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முப்போகம் விளையும் நிலங்களை மலடாக்கத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?
 
ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்தி பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்வதை யாரும் எதிர்க்கவில்லை. மாறாக, விளைநிலங்கள் மிகுந்த காவிரி பாசன மாவட்டங்களை விடுத்து, பாதிப்பில்லாத வகையில் வேறு மாநிலங்களில் நடத்திக் கொள்ளலாம் என்பது தான் பாமகவின் நிலை ஆகும். உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது.
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், காவிரி பாசன மாவட்டங்களின் செழுமையைப் பாதுகாக்கும் வகையிலும் அங்கு இனி எந்தவொரு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஓஎன்ஜிசி சார்பில் 44 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.
 
அதேநேரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தரமாகப் பாதுகாக்க அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்." இவ்வாறு அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...