மத்திய அரசின் கடன் தொகை செப்டம்பர் காலாண்டில் ரூ.125.71 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 30 , 2021 11:11:01 IST
மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் தொகை செப்டம்பர் காலாண்டில் ரூ.125.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.120,91,193 கோடியாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் இந்த கடன் ரூ.125,71,741 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் முந்தைய காலாண்டின் அடிப்படையில் ஒப்பிடும்போது ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் அளவு 3.97 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.125.71 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசுக்கான ஒட்டுமொத்த கடன் பொறுப்பில் பொதுக் கடனின் பங்களிப்பு செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி 91.15 சதவீதமாக உள்ளது. இது, ஜூன் இறுதியில் 91.60 சதவீதமாகக் காணப்பட்டது.