???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய பட்ஜெட் - தொடர் பதிவு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  01:05:48 IST

நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்  செய்து உரையாற்றினார்.


பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

 

புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு, பள்ளி மற்றும் உயர் கல்வி மேம்படுத்தப்படும்.

 

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் தொடரும்.

 

ஒரு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியிலிருந்து ரொக்கப்பணம் எடுத்தால் 2% வரி.

நாட்டின் 17 முக்கிய சுற்றுலாத்தளங்கள் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

புதிய 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுளதாக அறிவிப்பு

பெண்கள் சுய உதவிக் குழு மூலமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூபாய் 1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

 

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை. முந்தைய முறையே தொடர்கிறது.

400 கோடி வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங்களுக்கு 25% வரி குறைப்பு.

மின்னணு பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரத்து.

 

தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.

இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கவுஷல் விகாஸ் யோஜனா அமைக்கப்படும்.

கழிவு சுத்திகரிப்புக்காக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஸ்டார்ட்-அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனியாக தொலைக்காட்சி உருவாக்கப்படும்.

 

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்பதை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

என்சைக்ளோபீடியா  போல் காந்திப்பீடியா உருவாக்கப்பட்டு இளைஞர்களிடம் காந்தியக் கொள்கை கொண்டுச் செல்லப்படும்.

ஆரய்ச்சிகளை ஊக்குவிக்கும் தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.

 

5 ஆண்டுகளில் ரூ 80, 250 கோடியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்படும்.  

50 ஆயிரம் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

75 ஆயிரம் தொழில் முனைவோருக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

எல்லா வீடுகளுக்கும் குடிநீடிநீர் விநியோகிக்க ’ஹர் கர் ஜல்’ என்ற திட்டம் உருவாக்கப்படும்.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் 9. 6 கோடி கழிப்பறைகள் கடித்தரப்படுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதவிறக்கம் செய்துள்ளனர்.

விவசாயிகள் மேம்பாட்டுக்காக 10 ஆயிரம் புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

2019 அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாக எல்லா நகரங்களும் மாற்றப்படும்.

 

கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
 
2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு பெற்றிருப்பார்கள்.

விண்வெளித்துறையில் வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா இருக்கிறது.

ஒரே நாடு ஒரே மின்சாரம் விநியோகம் திட்டம்  அறிமுக செய்யப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில்  ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை, எளிய மக்கள்  பலன் அடைந்துள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயரும்.

டிஜிட்டல்  இந்தியாவின் பலனை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம்.

அனைத்து துறைகளிலும்  டிஜிட்டல் இந்தியா  திட்டங்கள் கொண்டு செல்ல ஆர்வம்  காட்டப்படும்.

நிலையான ஒளிமயமான  இந்தியா மலரும் என்று நம்பிக்கை கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் அரசின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

 2030-ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்து, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

'உதான் திட்டம்' மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.


English Summary
Central budget updation

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...