???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் கூடுதலாக 6,500 கண்காணிப்பு கேமராக்கள்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   01 , 2020  23:40:46 IST

கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வனாதன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் “போக்குவரத்து விபத்துகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் வழக்குகள் குறைந்து 6,871ஆகப் பதிவாகியுள்ளன. சாலை உயிரிழப்புகளைப் பொறுத்தவரை 2018 - ல் 1,297ஆக இருந்த நிலையில் 2019-ல் 1,252 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வரதட்சனை தொடர்பான மரணங்கள் 2019 ஆண்டு நடைபெறவில்லை . காவலன் செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் கூறினார்.

மேலும் “தோழி திட்டமும் பெண்களுக்குப் பயனுள்ளதாக இருந்துள்ளது. அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் 113 கோடி செலவில் 6,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவை சென்னையில் முக்கியமான 2000 இடங்களில் பொருத்த முடிவு செய்யப்ப்பட்டுள்ளது. அதேப்போல் இந்தியாவிலேயே சென்னைதான் மிகவும் பாதுகாப்பான இடம் என்ற பெருமையும் கொண்டிருக்கிறது" என்றும் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...