???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   08 , 2020  21:57:55 IST

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் அகிய பாடங்களில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. 11-ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் முக்கிய பாடங்களான கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளன. பிராந்திய அரசுகள் என்ற பாடத்தில் ஏன் பிராந்திய அரசுகள் தேவை எனும் பகுதி நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிராந்திய அரசுகளின் வளர்ச்சி பாடமும் நீக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் பாடத்தில், ‘தற்போதைய உலகில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், பிராந்திய கனவுகள் ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மாறிவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, திட்டம் குழு மற்றும் ஐந்தாண்டு திட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளம.

அண்டை நாடுகளுடன் உறவு: பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம், சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்தின் சவால் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...