![]() |
மாநில மொழிகளைப் புறக்கணித்த சிபிஎஸ்இ: வலுக்கும் எதிர்ப்பு!Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22 , 2021 12:58:46 IST
![]()
பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் முதல்முறையாக முதன்மை பாடங்கள் மற்றும் துணைப் பாடங்கள் என பிரித்து சி.பி.எஸ்.இ வெளியிட்ட அட்டவணை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களை முதன்மை பாடங்களாகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட மாநில மொழிகளை துணைப் பாடங்களாகவும் சி.பி.எஸ்.இ குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்துவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
|
|