???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  22:33:11 IST

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம்.  மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை அவருடைய சொத்துகளை முடக்கியது.

ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில்கவுர் நேற்று ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மூத்த வழக்கறிஞர் கபில்சிபலுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க கோரியதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்க மறுத்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். ஒரு பெண் அதிகாரி உள்பட 6 பேர் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர் அப்போது வீட்டில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்களும் அங்கு விரைந்தனர். இதனால் டெல்லியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ப. சிதம்பரம் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

இதனிடையே, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை மீண்டும் சென்றுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...