???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  22:32:05 IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து, நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று இரவு முதல் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடங்குகிறது என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...