???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   26 , 2020  21:39:47 IST

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கொலை தொடர்பாக கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார். இதனால், மற்ற 9 பேர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
அதில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்ஸிஸ், வேலுமுத்து ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குள் சட்டவிரோதமாக வைத்து துன்புறுத்தப்பட்டதாகவும், தந்தையும், மகனும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தந்தை, மகன் கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...