???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சி.பி.ஐ இயக்குநர் மாற்றப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   06 , 2018  21:30:03 IST

சி.பி.ஐ இயக்குநராக உள்ள அலோக் வர்மாவையும், கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவையும் திடீரென்று மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல பணித்தது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 
அப்போது சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா சார்பில் ஆஜரான பாலி எஸ்.நாரிமன், ‘எப்படி பெயரளவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட முடியாதோ, அதேபோல, பெயரளவு சி.பி.ஐ இயக்குநராகவும் செயல்பட முடியாது. பெயரவுளவு சி.பி.ஐ இயக்குநரை நியமிப்பதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. என்னுடைய அலுவலகத்திலுள்ள அனைத்து அதிகாரங்களும் பறித்துக் கொள்ளப்பட்டால், அதற்குப் பெயர் பணி மாற்றம் (transfer) தான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுப்படுவது மட்டும் பணி மாற்றம் இல்லை. அதிகாரத்தை முடக்குவதும் பணிமாற்றம்தான். சி.பி.ஐ. இயக்குநராக இருப்பது என்பது விஸ்டிங் கார்டில்(visiting card) மட்டும் சி.பி.ஐ இயக்குநர் என்று இருப்பது இல்லை’ என்று தெரிவித்தார்.
 
அதனையடுத்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ‘அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு முன்னதாக ஏன் தேர்வுக் குழுவுடன் விவாதிக்கவில்லை. தேர்வுக் குழுவுடன் விவாதிக்காமல் அவர்களைப் பதவி நீக்கம் செய்ததைவிட விவாதித்தப் பிறகு முடிவு எடுத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும். இது சட்டத்தைப் பின்பற்றுவது தொடர்பான கேள்வி மட்டுமல்ல. சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதை வலியுறுத்துவது. ஏன் அரசு முழுவதும் வெளிப்படையாக இல்லை. நிர்வாகம் செய்வதற்கு எது சிறப்பானதாக இருக்கிறதோ அதுவே எல்லா அரசினுடைய செயல்பாட்டின் சாரம்’ என்று தெரிவித்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...