???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரியிலிருந்து 9.2 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:21:06 IST

நடப்பு நீராண்டுக்கான மூன்றாவது மற்றும் கடைசி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய நீர்வள ஆணையத் தலைவரும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான மசூத் உசைன் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

இதில் மத்திய அரசின் தலைமை பொறியாளர் நவீன் குமார், தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழிநுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியம், கர்நாடக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் ராகேஷ் சிங், கேரளா சார்பில் முதன்மை பொறியாளர்கள் அசோக் மற்றும் மேத்யூ வில்சன்,  புதுச்சேரி முதன்மை பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் 3 பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கூட்டத்தில் ஒரு பொருள் நிரலாக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரம் குறித்து மேலாண்மை ஆணையத்தின் எந்தக் கூட்டத்திலும் விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

குறுவை சாகுபடிக்கு ஏதுவாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.2 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், இதேபோல் எந்த குறைபாடும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நீர் திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிப்ரவரி முதல் மே வரை ஒவ்வொரு மாதமும் 2.5 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும், அதேபோல் தற்போதைய நீராண்டில் திறந்துவிடாமல் நிலுவையில் இருக்கும் 2 டி.எம்.சி. நீரை மே மாதத்திற்குள் உடனடியாக திறந்துவிட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் முதல் மே வரையிலான நீர் திறப்பு, நீர் வரத்து, மழைப்பொழிவு 4 மாநில அணைகளின் நீர்மட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...