???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   28 , 2019  00:00:23 IST

மேட்டூர் அணையை நம்பி தமிழகத்தில் 12 டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஜுன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை, 231 நாட்களுக்கு முறை வாரியாக தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு பெருமழை வந்து ஒரு போக சாகுபடியை காப்பாற்றிச்சென்றது. ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லை. மேட்டூர் அணையில் தற்போது 16.172 டிஎம்சி தண்ணீர் அதாவது 47 அடி மட்டுமே மட்டுமே உள்ளது.

வினாடிக்கு 51 கன அடி வீதம் அணைக்கு தண்ணீர் வரும் சூழலில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. வரத்தை விட வெளியேற்றம் அதிகம் இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இப்போதிலிருந்து தொடங்கினால் கூட, விநாடிக்கு 33,000 கனஅடி நீர் வந்தால் மட்டுமே ஜூன் 12-ல் அணையை திறக்க முடியும். அதேநேரம் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட இந்த 85 ஆண்டுகளில் ஜூன் 12-ம் தேதி திறந்ததை விட காலதாமதமாக திறக்கப்பட்ட ஆண்டுகளே அதிகம்.

இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டி.எம்.சி நீரை தரவேண்டும் என்று கர்நாடகாவை, தமிழக அரசு வலியுறுத்தியது.

இது தொடர்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் கர்நாடக அரசு எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதேபோல், இன்றைய கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாதென்று வலியுறுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...