???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2019  23:32:50 IST

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில்,

"மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்படாமலும் ஆளும் மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன.

அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாய கூலித்தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அதன்மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சி நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின் இத்தகைய அவல நிலையை போக்கிடவும் காவிரி-டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடக்கோரியும், வருகிற 28-ந்தேதி காலை முதல் இரவு வரை, தஞ்சாவூர் மகாராஜா திருமண மண்டபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் எம்.பி., தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி. இராமலிங்கம், கரூர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...