???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   22 , 2017  07:20:12 IST

ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் .

 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகள் நடப்பது தொடர் செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது. பெற்றோரே மகளை எரித்துக் கொல்வது, உற்றார் உறவினர்கள் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கொலை செய்வது உள்ளிட்ட மிகக் கொடூரமான சம்பவங்களை தமிழகம் கண்டு கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், இச்சட்டத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலத்திலிருந்து சென்னை வரை கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபயண இயக்கத்தை நடத்தி வருகிறது. ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தீண்டாமைக்கு எதிரான சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த நடைபயணம் இன்று சென்னையை வந்தடைகிறது.

 

சாதி ஒடுக்குமுறையும், தீண்டாமையும், ஆணவக் கொலைகளும் பெருகி வரும் நிலையில் இவற்றை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...