அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2022  06:51:04 IST

குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலருக்கும்,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளருக்கும்  2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல் பரஸ்பரம் ஒருமித்த கருத்துடன் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின் இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்ற கணவர், அவர்களை தனது சகோதரி பராமரிப்பில் விட்டுள்ளார்.
 
இந்நிலையில் குழந்தைகளை தன்வசம் ஒப்படைக்க கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்க கோரிய மனுவில் நியாயமான எந்த காரணத்தையும் நிரூபிக்கவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இரு குழந்தைகளையும் நேரில் வரவழைத்து விசாரித்தது.
 
அப்போது, தந்தை தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், தாயுடன் செல்ல விரும்புவதாகவும் இரு குழந்தைகளும் கூறினர். நீதிமன்ற அறையில் தாயை சந்திக்க அனுமதியளித்த நிலையில், இரு குழந்தைகளும் தாயும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இது நீதிமன்ற அறையில் இருந்தவர்களின் உள்ளத்தை கலங்கச் செய்தது.
 
இதையடுத்து, குழந்தைகளை தாயுடன் செல்ல அனுமதித்த நீதிபதிகள், அவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட உடைமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தந்தைக்கு உத்தரவிட்டனர். மீறி ஏதேனும் இடையூறு விளைவித்தால் காவல் துறையில் புகார் அளிக்க தாய்க்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
 
குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கை ஆறு ஆண்டுகளுக்கு பின் தள்ளுபடி செய்த குடும்ப நல நீதிமன்றம், குழந்தைகளை அழைத்து விசாரித்து முடிவெடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளில் முடிவெடுக்க காலதாமதம் செய்தால் அது குழந்தைகளின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...