அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   07 , 2021  10:25:21 IST

கோவை செட்டிவீதியில் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்தால் பிறந்த ஆண் குழந்தை இறந்தது. இதுதொடர்பாக புண்ணியவதி என்ற பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கோவை  செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு  ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.
 
4-வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்து வந்த புண்ணியவதி, மருத்துவமனைக்கு செல்லாமல்  வீட்டில் வைத்து  தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது. தொப்புள்கொடி சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர்.
 
2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு சென்ற நிலையில்,மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த  பெரியகடை காவல் துறையினர் விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தையின் தாய் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315-( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...