???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை தமிழ் அகதிகளிடம் கருத்து கேட்ட நிருபர்கள் மீது வழக்கு: கனிமொழி கண்டனம்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  22:50:14 IST

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களிடம் செய்தி சேகரிக்கச் சென்ற விகடன் நிறுவனத்தில் பணியாற்றும் நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் இருவர் மீதும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர்கள் மீது, பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், விநியோகித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 505-வது பிரிவு பிணையில் வர முடியாத பிரிவு ஆகும். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாக்குமரியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில், ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். உடனடியாக ஊடகத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...