???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நன்கொடை தராததால் பனியன் நிறுவனம் சூறை: இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்கு!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  00:51:25 IST

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஜீவா காலனி பகுதியில் சுரேஷ் (வயது 39) என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவருடைய பனியன் நிறுவனத்தின் இருபுறமும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரு தரப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சுரேஷ் ரூ.10 ஆயிரம் நன்கொடை கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து மற்றொரு தரப்பினர் தங்களுக்கும் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க கோரி அவரது பனியன் நிறுவனத்துக்கு சென்றனர். ஆனால் சுரேஷை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அந்த தரப்பினருக்கு நன்கொடை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்த தரப்பினர் சுரேஷ் மீது ஆத்திரம் கொண்டனர்.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அந்த தரப்பினர் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு இருந்த விநாயகர் சிலையுடன் திடீரென சுரேஷின் பனியன் நிறுவனத்துக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் அமைப்புக்கு ஏன் நன்கொடை தரவில்லை? என அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் பனியன் நிறுவன வளாகத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி சூறையாடினார்கள். இதை தட்டி கேட்ட பனியன் நிறுவன மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, மெக்கானிக் சிவக்குமார் ஆகியோரை அந்த அமைப்பினர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பனியன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலம்பரசன், சதீஷ், நெல்லை கணேசன், சிவா, சுந்தர் உள்ளிட்ட 20 பேர் மீது கொலைமிரட்டல், அபாய ஆயுதங்களை பயன்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், அடித்து காயப்படுத்துதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...