???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   23 , 2019  00:12:09 IST

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டுமென பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிகையும் வாக்குப்பதிவு நாளில் வருவதால் கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பாப்புசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருந்திருந்தார்.
 
கிறிஸ்தவ மக்களின் புனித வாரத்தில் தேர்தல் இருப்பதால் தங்கள் வழிபாடுகளை முழுமையாக கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் நடத்த முடியாது என்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமெனக்கோரி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த மூன்று வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சித்திரைத் திருவிழா நாளில் தேர்தல் நடக்கும் என்பதால், வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும், தேவாலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் வாதிட்டார். இதை ஏற்ற சென்னை  உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு எதிரான 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...