அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கேப்டன்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   09 , 2022  21:08:23 IST


Andhimazhai Imageகனிமவளங்களைக் கொள்ளையடிப்பதற்கு, அரசு போடும் சதி திட்டத்தை ராணுவ வீரர் ஒருவர் முறியடிப்பதே கேப்டன் திரைப்படம்.

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் செக்டார் 42 எனப்படும் இடம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத, சென்றவர்கள் திரும்பி வரமுடியாத அளவுக்கு மிகவும் அபாயகரமான வனப்பகுதி. அந்த இடத்தை அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வர நினைக்கிறது. அதற்கு ராணுவத்தின் தடையில்லா சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால் ராணுவத்தின் உதவியை நாடுகிறது அரசு. இதை செய்து முடிக்கும் பணி, போர் தந்திரத்தில் வல்லவரான ஆர்யாவிடம் (வெற்றிச்செல்வன்) ஒப்படைக்கப்படுகிறது. அவரின் குழு வனப்பகுதிக்கு செல்ல, அவர்களுக்கு அதிர்ச்சியும், இழப்பும் காத்திருக்கிறது.

அரசின் நோக்கம், அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அல்ல என்றும், அங்கிருக்கும் கனிமவளங்களை கொள்ளையடிப்பதே என்ற உண்மையும் ஆர்யாவுக்கு தெரிய வருகிறது. இறுதியில், அந்த இடம் ஏன் அபாயகரமானதாக இருக்கிறது, அரசுக்கு தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுநலத்துடன் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், கதை சொல்லலில் கோட்டைவிட்டிருக்கிறார். சுவாரஸ்யம், விறுவிறுப்பு, பிரம்மாண்டம் என எதிலும் அவ்வளவு அழுத்தம் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங்க்.

Monster வகையிலான திரைப்படங்கள் ஏற்கெனவே ஹாலிவுட்டில் நிறைய வந்திருப்பதால் கேப்டன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தலாம். அர்னால்ட் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த பிரிடேட்டர் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது கேப்டன்.

வீடியோ கேம்ஸில் வரும் ராணுவ வீரர் போல் உள்ளார் ஆர்யா. ஒரே மாதிரியான முகபாவனை. ஆர்யாவின் தலைமையில் செயல்படும் குழுவில் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி ஆகியோர் உள்ளனர். இவர்களின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். அவருக்கு ஸ்கோப் இல்லை.

VFX தொழில்நுட்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். டி. இமானின் பின்னணி இசை மட்டுமே கொஞ்சம் திகிலை தருகிறது. பாடல்கள் அசைபோடும் அளவிற்கு வரவில்லை.

எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். வனப்பகுதி காட்சிகள் படத்தின் த்ரில்லர் தன்மைக்கு உதவியிருக்கிறது. பிரதீப் இ. ராகவ்வின் எடிட்டிங் ஓகே.

ஆர்யா குழுவினரின் உடம்பிலிருந்த மிடுக்கு திரைக்கதையில் இருந்திருந்தால் படம் நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்கும். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...