அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

3 வேளையும் சட்னி சாப்பிட முடியுமா? கனிமொழி கேள்வி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2022  08:23:14 IST

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாமானியர்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திண்டாடும் நிலை உள்ளதாகவும், 3 வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
 
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. திமுக எம்பி கனிமொழி பேசுகையில், விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது.
 
அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது’ என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
 
தொடர்ந்து பேசிய கனிமொழி, “விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கத்தேவையில்லை.  மத்தியஅமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார். மூன்று வேளையும் சட்டினியை மட்டும் அறைத்து சாப்பிட முடியுமா? ” என கேள்வி எழுப்பினார்
 
திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், அவையில் கத்தரிக்காயை கடித்துக் காண்பித்து, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் மக்கள் காய்கறிகளை பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...