???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  21:35:38 IST

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார். அந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் திருத்தக்கோரிக்கை தோல்வியடைந்தது.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் திரிணாமுல் காங்கிரஸ் கோரிய 14 திருத்தங்களும் தோல்வியடைந்தன. கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, 8.40 மணி அளவில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின்போது, அவையில் 230 உறுப்பினர்கள் இருந்தனர். மசோதா வெற்றி பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. வாக்கெடுப்பின்போது, 125 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர். அதனையடுத்து, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா சட்டமாகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...