![]() |
காதல், சண்டை, மோதல்: வனிதா வருகையால் நடந்தது என்ன?Posted : புதன்கிழமை, ஆகஸ்ட் 14 , 2019 13:15:37 IST
பிக்பாஸின் நேற்றைய எபிசோட் ‘வந்தாள் மகா லட்சுமியே’ என்ற பாடலுடன் தொடங்கியது.
வனிதாவின் வருகையை மறைமுகமாக நக்கல் செய்வது போல பாடல் அமைந்தது. வனிதா வீட்டிற்குள் வந்து 24 மணி நேரம் முடிவதற்குள் பெரிய கலகத்தை முகெனுக்கும் அபிராமிக்கும் இடையில் ஏற்படுத்தினார். முகெனுக்கு பின்னால் சுற்றுவதால் அபிராமியை மக்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்று அபியிடனும் ஷெரினிடமும் வனிதா கூறினார். சனி-ஞாயிறு எபிசோடில் கமல் அபிராமியிடம் ‘ முகெனின் வளர்ச்சிக்கு அபிராமி தடையாக இருப்பதாக கூறியபோது. முகென் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது சரியில்லை’ என்று கூறினார். மேலும் முகெனுக்கு ஸ்பார்க்கிள் என்பவரை தவிர வேறு ஒரு முறைப் பொண்ணும் இருக்கிறார் என்றார்.
அபிராமியின் மனதில் சிறுகச் சிறுக விஷம் ஏற்றினார். இதைத்தொடர்ந்து அனைவரின் முன்னிலையில் இந்த விஷயம் விவாதப்பொருள் ஆனது. அப்போது முகென் ‘ அபிராமி வாரம் வாரம் வெவ்வேறாக மாறுகிறார்’ என்று கூறினார். இதனால் அபிராமி மேலும் கோபம் அடைந்தார். ‘ உனது சம்மதம் அல்லாமல் நான் ஏதும் செய்தது கிடையாது. எனது மேல் மட்டும் பழி விழுவது சரியில்லை’ என்றார் அபிராமி.
சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் முகெனுக்கு ஆதரவாகவும் ஷெரின், மதுமிதா, லாஸ்லியா அபிராமிக்கு ஆதரவாகவும் பேசினர். இதைத்தொடர்ந்து பேசிய அபிராமி ‘ நான் உன்னை வளர விடக்கூடாது என்பதற்காகவா செய்தேன்’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். இதைத்தொடர்ந்து கோபமாக அவர் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளினார். முகென் தனது நாற்காலியை கோபமாக கையில் எடுத்து அடிக்க செல்வதுபோல் சென்றார். இருவரையும் மற்ற போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அபிராமியை தனியாக அழைத்து சென்று லாஸ்லியாவும் ஷெரினும் சமாதானப்படுத்தினர்.
’மக்களின் மனதை வெல்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால் எல்லாம் இப்போது மாறிவிட்டது ஷெரின்’ என்று கத்தி அழுதார் அபிராமி. தொடர்ந்து முகென் இந்த சண்டையால் அழத்தொடங்கினார். அவரை கவின், சாண்டி, சேரன், வனிதா சமாதானப்படுத்தினர். எல்லாரும் தன்னையே குறை சொல்கிறார்கள் என்று வருத்தப்பட்டார். அபிராமியின் காதலுக்கு நீ சரியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்று சேரன் பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய வனிதா ‘அபிராமியின் மேல் தவறு இருப்பதுபோல் உன் மீதும் தவறு இருக்கிறது’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து ’இனி அபிராமியிடம் நீ பேசக்கூடாது என்று’ சாண்டி, கவின், வனிதா கூறினர்.
மேலும் வனிதா சொல்லும் எல்லா உணவு வகைகளையும் மதுமிதா சமைத்து கொடுத்தார். இறுதியில் வனிதாவை மகிழ்விக்க லாஸ்லியாவும் முகென்னும் பாடல் பாடினர். காதல் தோல்வியால் வாடும் பெண்களுக்கான பாடலை பாடினர்.
வனிதா வீட்டினுள் வந்த ஒரு நாளிலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்துவிட்டார்.
|
|