![]() |
பட்ஜெட் 2021 : 6 -10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 23 , 2021 12:37:57 IST
அனைத்து அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மினி கிளினிக்காக 144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்திற்காக 3548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரித்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
6,683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44 கி.மீட்டர் நீளமுள்ள கோயமுத்தூத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சித் திட்டத்திற்கு 3,140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது என்றும், 2021-22-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94%, ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது எனவும், 2021-22-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும் எனவும் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
|
|