???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்தனியாகப் போட்டி! - மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   04 , 2019  04:58:45 IST


Andhimazhai Image

உத்தர பிரதேசத்தில் நடைப்பெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

 
மக்களவைத் தேர்தலில் பாஜக – காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது.
 
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற முதன்மை இலக்கோடு உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சில தொகுதிகள் இக்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதியும் முலாயம் சிங்கும் ஒரேமேடையில் பிரசாரம், அனைத்து பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் உத்தி, தீவிர களப்பணி என பலவிதமாக உழைத்தும் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் மட்டுமே வென்றன. 62 தொகுதிகளில் வெற்றிப்பெற்று உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் வரலாறு படைத்திருக்கிறது.
 
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து, மக்களவை உறுப்பினர்களாகியிருக்கும் 11 பேர் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் 11 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது. மக்களவைத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், சட்டப்பேரவையில் தனது பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள மாயாவதி விரும்புவதாக கூறப்படுகிறது.
 
கூட்டணிக் கணக்கு பலிக்காததாலும், சமாஜ்வாதி வாக்குகள் பகுஜன் கட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்காததாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த மாயாவதி, 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
இதையடுத்து பதிலுக்கு தாங்களும் தனித்துப் போட்டியிடப்போவதாக உடனடியாக அகிலேஷும் அறிவித்துள்ளார்.
 
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் சமாஜ்வாதி கட்சியுடனான நட்பு தொடரும். அகிலேஷின் அரசியல் பயணத்தை பொறுத்து மீண்டும் தேர்தல் களத்தில் இணைவது பற்றி யோசிக்கப்படுமென மாயாவதி தெரிவித்திருக்கிறார். 
 
உத்தர பிரதேச அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த திருப்பம், கூட்டணி முறிவுக்கான ஆரம்பமென தேசிய அளவில் பரவலாக பேசப்படுகிறது.

English Summary
BSP and SP contesting separately in legislative byelection

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...