![]() |
சுகாதாரத்துறை அமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா!Posted : செவ்வாய்க்கிழமை, மார்ச் 10 , 2020 23:56:32 IST
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரிட்டனில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருடன் பணியாற்றிய நபர்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வியாக்கிழமை அன்று நாடின் டோரிஸுக்கு கொரோனா ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது என்றும் அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
|