???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜாலியன் வாலாபாக்: ஆழ்ந்த வருத்தமா? மன்னிப்பா?

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2019  00:10:12 IST


Andhimazhai Image

 

 

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டை இந்தியாவில் இன்று நினைவுகூர்வதற்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்றது. படுகொலையின் துயர வடுக்களை உணர்ந்தவர்களான இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் எவ்வளவு முயன்றும் ஒன்றை சாத்தியப்படுத்தவே முடியவில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்பட வேண்டுமென இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அசைந்துகொடுக்காத பிரிட்டன், 'ஆழ்ந்த வருத்தம்' தெரிவிக்க மட்டுமே சம்மதித்தது.

 

இன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த மோசமான படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரஸா மே ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்திருக்கிறார். இந்திய வம்சாவளி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நினைவூட்டலாலும், அழுத்தத்தாலும் நடந்தேறிய ஒரு நகர்வு தான் இது.

 

ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய விவாதங்களை எழுப்பிய இந்திய சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னிப்பு கோரப்பட வேண்டுமென காத்திரமாக வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைக்கு பிரிட்டன் உறுப்பினர்களில் சிலர் ஆதரவு அளித்திருந்தால் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நூறாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்கு தற்போதைய அரசு மன்னிப்பு கேட்பது பொருத்தமற்றது எனக் கூறி அவர்களது வாதம் புறம்தள்ளப்பட்டது.

 

இதனை மையப்படுத்தி பரவலாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் பொதுவான அர்த்தம் ஒன்று மட்டும் தான். நிச்சயம் ஆழ்ந்த வருத்தம் மட்டும் போதாது. மன்னிப்புக்கும் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்வதற்கும் சொல்லில் மட்டுமல்ல பொருளிலும் பெரிய வேறுபாடு உள்ளது. பல்வேறு சர்வதேச நாடுகள் அதனது ஆதிக்க காலத்தில் நிகழ்த்திய கொடுமைகளுக்காக பின்னாளில் மன்னிப்பு கோரியிருக்கின்றன. அப்படியான கொடுமைக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய நாட்டின் அடுத்த தலைமுறையிடமிருந்து குறைந்தபட்ச குற்றவுணர்வும் எழவில்லை என்பது பெரிய குறை தான்!

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...