![]() |
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியாPosted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 , 2021 13:15:17 IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இறுதிக்கட்டத்தின் பரபரப்பான சூழலில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. முன்னணி வீரர்கள் பலரும் இல்லாத சூழலில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
|
|